அவள் அப்படித்தான் - ப்ரியன்

நினைக்காத பொழுது
நெருங்கியிருந்து
எதிர்பார்க்கும் வேளையில்
எட்டி நிற்பாள் :-(
சிந்தனைகளை சிதறடித்து
உறக்கங்களை உருகுலைத்து
உன் கவிதைக்கு
கருப்பொருள் ஆவாள் :-(
பார்த்தோ சிரித்தோ
அழுதோ பேசியோ
உன்னை
ஆட்டி வைப்பாள் :-(
உள்ளத்து ஆசைகளுக்கு
அழைப்பு விடுத்து
காதலதை உண்டாக்கி
கற்றுத்தர மறுப்பாள் :-(
உணர்வுகளை உதாசினப்படுத்தி
வார்த்தைகளால் வதைத்து
தோல்வியென்பதை முதலில்
அறிமுகப்படுத்துவாள் வாழ்வில் :-(
புவியிலே பெண்ணென்றாள்
இப்படித்தானென புரியவைத்து
இரக்கமற்ற இதயமாக்குவாள்
அவள் இதயம்போல :-(
சுமையென தோன்றா
சோகங்கள்
தனிமை
பாகுபாடு தெரியா
இன்பம்
துன்பம்
வாழ்க்கையின் புதிராய்
குறிக்கோள்
திசைகள் :-(
அவளால் எத்தனையோ
உன்னில் பல மாற்றங்கள்
ஆனால்
அவள் மட்டும் அப்படியே
இங்கே
யார் அவளை மாற்றுவது :-(