முதன் முதலாக-வித்யா
முதன் முதலாக-வித்யா.
முதன் முதலாக
நாம் பேசிக்கொண்டபோது
என் காதுகள் ஒரு பழையபாடலை
கேட்டுக்கொண்டிருந்தது.........!
முதன் முதலாக
நாம் சந்தித்தபோது
எனது விழிகள் அப்பாடலைப் பாடிக்கொண்டிருந்தது........!
முதன் முதலாக
நீ என் பெயரை உச்சரித்தபோது
ஆயிரம் குருவிகள் பின்னணி இசைத்தது..........!
முதன் முதலாக
உன்னோடு என் கால்கள் நடந்தபோது
இந்த உலகமே நமை உற்று நோக்கியது..............!
முதன் முதலாக
நீ காதல் சொல்லியபோது
என்னிதயத்தின் ஓசை
பெருங்கடலென ஆர்பரித்தது................!
இறந்தகால முதன் அனுபவங்களெல்லாம்
என் ஓவொரு விடியலிலும்
முதல் நினைவுகளாகவே...................!
ஒரு அழகிய பாடல்
என் வாழ்வில் எழுதப்படுமாயின்
அதில் நான் உன் மனைவி என்றிருக்கும்.......!
காதலைத்தவிர எதுவும்
பகிர்ந்து கொள்ளாத நம் காதலில்
காதல் கொண்டே காதலைத் தொலைக்க
நான் துணிந்தது எங்கனம்......?
இப்போதும் போல எப்போதும்
உன்னை காதலித்துக்கொண்டே இருப்பேன்
காதலே எனை விட்டுப்போனாலும்
காதலை நான் விடுவதாய் இல்லை............!
இல்லையேல்
மெழுகின் சுடரில் தற்கொலை செய்யும்
விட்டில் பூச்சியாய் மாறிடுவேன்..............!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
