காதலைக் கொன்றவளேனே

அன்னையன்புக் கரங்கள் தீட்டிய
உயிரோவியமாய் இருந்த என்னை
மனதால் வந்து நிறம்சேர்த்தவளே(ரே)
கலைப்போருளாய் மாறிய என்னை
காகிதகுப்பையென எறிந்தாயே ஏன்..?
சாதியின் பக்கம்நீ சாய்ந்துவிட்டாயோ..
மதத்தை பார்த்துநீ மாறிவிட்டாயோ..
காதலைக் கொண்டே ஒழிக்கவேண்டிய
சாதிமத பேதங்கள் எல்லாம்..
நம்காதலைக் கொன்றே வளர்கிறதே
நீயென்னைப் பிரிந்த காரணத்தால்...

எழுதியவர் : (11-Jul-14, 11:37 am)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 318

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே