இழந்ததினால் இழந்தது

உன்னை இழந்ததினால் நான் இழந்தது

அதிகாலை குருவியின் இசையொலி…
புல்லின் நுனியின் பனித்துளி…
பணிக்கு செல்கையில் முகத்தில் அடிக்கும் தூய காற்று…
வேளையில் அலைந்து திரிந்து வரும் போது மனதிற்கு இதம் அளிக்கும் ஆலமர நிழல்…
அந்தி சாயும் நேரம் குயிலின் கீதம் …
ஆடி காற்றை இழந்தேன் …
ஐப்பசி மழையை இழந்தேன் …
மார்கழி மாசத்தின் கண்ணை மறைக்கும் பனியை இழந்தேன்…

இழந்தேன் மேலும்,நான் சுவாசிக்க வேண்டிய சுத்த ஆக்சிஜென் ஐ
இழந்தேன்,தொண்டை நனைக்கும் தேவாமிர்த தூய தண்ணீர் ஐ
என் தலைமுறைகளால் நிமிர்ந்து பேச முடியவில்லை…
எங்கள் முதுகெழும்பு தேய்ந்து கொண்டு வருகிறது…
பார் பார்க்க எங்கள் முதுகெலும்பை நிமிர செய்ய வேண்டும்...


மரமே…
இனி உன்னை இழக்க போவதில்லை…
நான் உன்னை நட்டு வைக்க போகின்றேன் …
தனி மரம் தோப்பாகாது…
நான் மட்டும் செய்தால் எப்படி
என்னோடு கை சேர்த்து உன்னை வாழ வைக்க என் மக்கள் வருவர் !!!!!!
நாங்கள் உன்னை வாழ வைப்போம்

பசுமையை போற்றுவோம்… பசுமையை பாதுகாப்போம்…

எழுதியவர் : தேவிப்ரியா ஹரிஹரன் (11-Jul-14, 11:01 am)
பார்வை : 96

மேலே