ஹைக்கூ

ஹைக்கூ எனபது மூன்று வரி ஜப்பானியக் கவிதை வடிவம். அந்த ஹைக்கூ பாணியில் கவிதை எழுதும் அனைத்துக் கவிஞர்களும் தங்கள் ஒவ்வொரு படைப்புக்கும் ஹைக்கூ என்றே தலைப்பு கொடுப்பது சரியில்லை என்றே தோன்றுகிறது. மூன்று வரிக்கவிதை வகையைச் சேர்ந்தது எனபது அதை வாசிக்கும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். கவிதையின் மையக் கருத்தைத் தலைப்பாகக் கொடுத்தால் என்ன கெட்டுவிடும். ஆங்கிலத்தில் Sonnet, Ode, Elegy ஆகிய வடிவங்களில் கவிதை எழுதும் எந்தக் கவிஞரும் கவிதை எந்த வகையைச் சார்ந்த்தது என்பதைத் தலைப்பாகக் கொடுப்பத்தில்லை. ஒரு ஊரில் உள்ள எல்லா மக்களுக்கும் ஒரே பெயரைச் சூட்டி இருந்தால் எப்படி இருக்கும்?எனவே ஹைக்கூ என்பதைத் கவிதையின் தலைப்பாகக் கொடுப்பதை படைப்பாளிகள் தவிர்க்கும்படி வேண்டிக்கொள்கிறேன்

எழுதியவர் : மலர் (11-Jul-14, 8:43 pm)
Tanglish : haikkoo
பார்வை : 175

சிறந்த கட்டுரைகள்

மேலே