சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 1 விக்கிநேசுவர ஸ்தோத்திரம் - ராகம் பங்காள
விக்கிநேசுவர ஸ்தோத்திரம்
ராகம்: பங்காள – மேளகர்த்தா 29
பல்லவி
கிரிராஜஸுதா தநய ஸதய (கி)
அனுபல்லவி
ஸுரநாத முகா ர்ச்சித பாதயுக
பரிபாலய மாமிப ராஜமுக (கி)
சரணம்
கணநாத பராத்பர சங்கரா –
கம வாரிநிதி ரஜநீகர
ப ணிராஜகங்கண விக் நநிவா
ரண சாம்ப வ ஸ்ரீத்யாகராஜநுத (கி)
பொருளுரை:
மலைமகள் தனயனே! தயை பொருந்தியவனே!
இந்திரன் முதலியோரால் தொழப்படும் பாதனே! என்னைக் காத்தருள். யானை முகத்தவனே!
சிவகணங்களுக்குத் தலைவனே! பராத்பர! வேதங்களென்னும் கடலுக்குச் சந்திரன் போன்றவனே!
ஆதிசேடனைக் கங்கணமாக அணிந்தவனே! இடையூறுகளைப் போக்குபவனே! சிவகுமாரனே! ஸ்ரீ தியாகராஜனால் வணங்கப்படுபவனே!
(யு ட்யூபில் சுதா ரகுநாதன் பாடக் கேட்கலாம்)