சிரிப்புகள் ஆயிரம்

சிரிப்போடு கலந்த பேச்சு
சிந்தை மயக்கும்
கண்டிப்போடு இருக்கும் உறவே
உன்னை உண்மையாக்கும் .

வரவு என்றால்
சிரிப்பு தானே வரும்
செலவு என்றால்
சிந்தனை கூடும்
இயல்பான ஒன்றே

இடத்திற்கிடம் மாறும்
காரியம் சாதிக்க ஒரு சிரிப்பு
காயபடுத்திடும் போது ஒரு சிரிப்பு
கள்ளமில்லாமல் சிரிப்பவனை
பைத்தியமாக்கிடும் ஒரு சிரிப்பு
வறுமையில் தவிப்பவனை கண்டு
வஞ்சமுடன் ஒரு சிரிப்பு !!

கண்டிப்பு கொண்டவன் அக்கறை கொள்கிறான்
சிரித்து பேசி பேசி உன்னை நகைப்புக்குள் ஆக்கிடுவான்
எது நன்மை என்பதை அறிந்தால் நன்று
எதுவந்தாலும் சரிதான் என்றால்
அது தவறென்று உணரும் போது
உலகம் உன்னை எண்ணி சிரிக்கும்

எழுதியவர் : கனகரத்தினம் (11-Jul-14, 11:29 pm)
பார்வை : 147

மேலே