விடிவெள்ளி

இது ஒரு உண்மைச்சம்பவம். கேட்பவர் மனத்தை உருக்கும் சம்பவம். நம்மாலே இப்படி கூட நடந்திருக்குமா என்றெல்லாம் ஒருவரை ஒருவர் கேட்குமளவிட்கு நடந்த அந்த சம்பவத்தைப்பற்றி தான் இக்கதையில் கூறப்போகிறேன். அதாவது பேரிலப்போன்ரை பற்றி கூறப்போகிறேன். இககதைஜில் வரும் கதா பாத்திரங்கள் யாவும் கற்பனையே. சரி இனிக்கதைக்கு வருவோம்.
அது ஒரு கடற்கரைக் கிராமம். அன்றைக்கு முதல் நாள் தான் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் முடிந்து தூங்கிக் கொண்டு இருந்தது. அடுத்த நாளும் அமைதியாகவே இருக்கும் என்கிற நினைப்பில் சோம்பல் முறித்துக் கொண்டு படுக்கையில் இருந்து எழுந்திருந்தான் முகுந்தன். அவன் ஒரு கடற்றொலிலலி. அப்போது, அவனது தாய் நித்திரை விட்டு எழுந்திருக்கவில்லை. அப்போது தான் அங்கிருந்த கடிகாரம் அலறியது. நேரம் நான்கு மணி. முதல் நாள் கொண்டாடங்களின் ஆரவாரம் அடங்கவே இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் ஆஹிவிட்டது. எல்லோருக்கும் அடைத்தூக்கம். அசதி. முகுந்தனது தாய் அப்போது அடுக்களைப்பக்கம் சென்று, தம்பி முகுந்தன், எழும்புங்கோ இண்டைக்கு நீங்கள் தான் கடலுக்கு போகவேணும் என்று சொல்ல அவனும் கண்களை கசக்கிக் கொண்டு எழுந்திருந்தான். அம்மா நான் எங்கட வள்ளத்தை எங்கட வீட்டுப்பக்கம் நிறுத்தி போட்டு வந்தனான். அது நிக்குதோ எண்ட்டு பார்த்திட்டு வாறன் என்றான். இண்டைக்கு நீங்கள் கடலுக்கு போகேல்லை எண்டால் எங்கட குடும்பத்துக்கு சாப்பாடு இல்லை என்றாள் தாய். உண்மைதான். தகப்பன் இல்லாத குடும்பங்களில் ஒன்று தான் அது. மூன்று பெண் பிள்ளைகளுக்கு ஒரு ஆண் பிள்ளை முகுந்தன். இப்படியாக நேரம் ஒன்பதரை தாண்டி விட்டது. முகுந்தனை பார்த்து டேய் கடல் உள் வாங்கி இருக்குது வாடா போய்ப்பார்ப்பம் என்றனர் அவனது நண்பர்கள். அம்மா நான் நேரமாச்சுது கடலுக்கு போட்டு வாறன் என்று கூறிவிட்டு கடலுக்குச் சென்று விட்டான் முகுந்தன். அவன் போய் ஒரு ஐந்து நிமிடம் கூட அஹவில்லை. எல்லோரும் மிஹ வேஹமஹா ஐயோ கடல் வரூது, கடல் வரூது, எல்லாரும் ஓடுங்கோ எல்லாரும் ஓடுங்கோ என்றவாறு ஓடிவந்தனர். ஏதோ ரோல்லேர்கள் உருளுவது போல பயங்கர சத்தம் நாட் புறங்களிளுமிருந்து எழுந்தது. சரஸ்வதி என்னச்சுதோ எதாச்சுதோ என்று பப்பதட்கஹா வீட்டின் முன் வாயிலுக்கு வந்தாள். வீட்டு முன் பக்கம் முழுவதையும் முதல் அலை நனைத்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது அலை சரஸ்வத்யின் முதுகை நனைத்தது. ஓடு மட்டும் ஓடி பார்ப்போம் என்று நினைத்து அவளால் இயலுமட்டும் ஓடினாள். ஓடிய வேஹத்தில் காலில் ஏதோ அடி பட்டது. வலியையும் பொருட்படுத்தாமல் ஓடினாள். அலை நேரம் செலச்செல ஏறிக்கொண்டே இருந்தது. உடனே கையில் ஏதோ தட்டுப்பட்டது. அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். எதிரிலே எல்லாம் ஒரே நீர் மட்டம். ஒன்றுமே தெரியவில்லை. அவளுக்கு தலை சுற்றியது. எதைபார்ப்பது எதைபாதுகாப்பது? ஒன்றுமே புரியவில்லை. வீடு தரை மட்டம். எல்லாருடைய உயிர்களும் காப்பாற்றப்பட்டதே பெரிய விசயமகத்தெரிந்தது. இன்னும் அவர்களின் வாழ்வில் விடிவெள்ளி தோன்றுமா என்று இன்னும் ஒரு சந்தேகம்.

எழுதியவர் : puranthara (11-Jul-14, 8:07 pm)
Tanglish : vidivelli
பார்வை : 546

மேலே