முதுமை ஓர் வரம்
முதுமை ஓர் வரம்
கொடியது கொடியது முதுமை
கொடியது!!
அதனிலும் கொடியது முதுமையில்
வறுமை!!!
வறுமையில் தனிமை!!!
வீட்டின் பெயரோ அன்னை இல்லம்
அன்னை இருப்பதோ
"அநாதை இல்லம்"
முதுமை என்றால் ஏன்
இத்தனை பாராமுகம்!!!
மழலைக்காய் உழைத்த கால்கள்
முதுமையில் தல்லாடிட
அரவணைக்க ஆளின்றி
உறவினர் இடையே மதிப்பின்றி
அலட்சிய பார்வையும்
வறண்ட உள பிரதிபிம்பாவாய்
மொழிகளும் - நெஞ்சில் முள்ளாயினும்
என் மகள்(ன்) என்று பொறுத்து
இருக்கையில்........
உடல் தளர்வோடு உள்ளமும் தலர்ந்து
உழைத்த நாட்களை அசை போட்டு
உதவி கரம் கேட்டு தவிக்கையில்
வார்த்தையால் வதக்குகிறார்கள்
உதிர்ந்து பூனை சருகுகளாக...
குறையுமா முதியோர் இல்லம்
நிறையுமா அவர் சொந்த இல்லம்
பிறவி பயன் என்பது முதுமையே
அது சாபம் அல்ல.. ஒரு வரம்...
அன்னையும் பிதாவும்
மழலையாய் மாறுகையில்
மனசு மறக்கிறது என்றால்
நம் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை
ஓ.. இளைய சமுதாயமே
புரிந்து கொள் இனிவரும் காலத்தில்
நாமும் முதியோர் தான்..
முதுமையின் குண நலன்கள்
ஆரம்ப கல்வியில் புகுத்திட
வேண்டும் - அனுபவத்தில்
அன்பினால் பெற்ற அறிவு
கலி கொடுமையில் வற்றிடும்
போது கல்வி அறிவு கடுகளவேனும்
முதுமையை காக்க வழி காட்டும்
பணம் இருக்கும் போதே
ஓய்வு கால சேமிபீடல்
பிற்கால பிரச்சினையை தவிர்க்கலாம்
என்னவே இளமையில் முதுமைக்கு
திட்டமிடும் இன்றியமையாத
தன்மையை இயம்பிட வேண்டும்
இவுலகிட்கு!!!
இவர் முதுமை என்பது
குடும்பத்துக்கான உழைப்பு
என்பதை ஒரு நிமிடம் சிந்தித்து
அறிவில் வல்லரசான நாம்
முதுமை பேனி, நல் அன்பிலும்
வல்லரசாவோம்!!!