மரணப்படுக்கை

மாபாவியையும்
மகானாக்கும்
மரணப் படுக்கை
««««««
பாய்ந்தோடி செய்தபாவம்
உருண்டோடி படுக்கையிலே
திரண்டோடும் கண்ணீராய்....
««««««
மதிக்காமல் உறவையெல்லாம்
மிதித்தோடி செய்த பாவம்
கண்முன்னே விரிந்தோடும்...
««««««
மெய் மறந்து செய்த பாவம்
பொய்யுரைத்து பெற்ற சாபம்
மனக் கண்முன்னே நிழலாடும்
««««««
செய்திடாத தான தர்மம்
கண்பட்ட சிறு துறும்பாய்
மனதை உறுத்தி வறுத்தும்
««««««
எனக்கு எனக்கு என்றே அலைந்தோடி
சேர்த்து வைத்த சொத்து சுகம்
அத்தனையும் வெறுக்கும்
««««««
உதறிய உறவை யெல்லாம்
ஒன்றாய் உருவேற்றி
மீண்டும் ஒரு வாழ்க்கை வாழ
மனம் ஏங்கி தவிக்கும்
«««««
காலனின் கால் பிடித்து
கண்ணீர் பூ சொறிந்து
கதறி அழுதாலும்
காலன் தான் விடுவானா?
கடமை தனை மறப்பானா?
«««««««்
மனிதனாக்கி கொல்லும்
மரணத்தை மண்மூட வைப்பானா?
மயானத்தில் புதைப்பானா?

எழுதியவர் : சித்ரா ராஜ் (11-Jul-14, 11:38 pm)
பார்வை : 135

மேலே