எங்கே போனாய் இறைவா

எங்கே போனாய் இறைவா ?
---------------------------------------
தூணிலும் இருப்பாய்
துரும்பிலும் இருப்பாய்யென
பக்தர்களால் பாடப்படும் இறைவா !
பதிணோறு மாடி கட்டிடம்
படிரென்று
அடுக்கிவைத்த சீட்டுகட்டுபோல்
அப்படியே சரிந்தது சாய்ந்தபோது
நீ எந்த தூணில் இருந்தாய் ?
துணையாய் இருந்து
துயர் காக்க வேண்டிய நீ
மனித உயிர்களை துச்சமென நினைத்து
காத தூரம் ஔடிவிட்டாயோ ?
உன் உயிரை மட்டும் காத்திட ?
ஒரு சான் வயிற்றுக்காக
மனைவியை மறந்து
மாநிலம் துறைந்து வந்த
மனிதர்கள்தான் மான்டு போனார்கள் !
அவர்களுக்கு சமதி எழுப்ப
எங்கள் தமிழ்நாட்டில் தானா
கல்லரையை யை நீ எழுப்ப வேண்டும் !
கரைபடிந்து நிற்கின்றோம்
சிலகரையான்கள் செய்த தவறுக்காக !
நீயோ
இன்னும் ஒரு தூணிலோ துரும்பிலோ
தூங்கி கொண்டிருக்கின்றாய் !
துயரமே இல்லாமல்

எழுதியவர் : (12-Jul-14, 7:43 am)
சேர்த்தது : m arun
பார்வை : 67

மேலே