என் அறிவின் செறிவே , நீ அறிவாயா

நின் சுவாச சுகந்தம்
கலவா காற்று
தீண்டிப்போயினும்
தீண்டாது
தாண்டிப்போயினும்
குளிர்வதேயில்லை
அறிவாயா ?

நின் நாசி நுகர்விற்க்கு
மறுதலித்த
மலரினம் யாதும்
மனம் மயக்கும்
மணம்
கமழ்வதேயில்லை
அறிவாயா ?

நின் நினைவின்
நீரருவியில்
நனைந்து திரும்பாத
வார்த்தையோ
வார்த்தைகள் வரிசேர்ந்த
வாக்கியமோ
வாக்கியங்கள் வடிவமைத்த
வர்ணனையோ
படிக்கப்படுவதும்
பகிரப்படுவதும்
பாராட்டப்படுவதும்
ஒரு புறம் கிடக்கட்டும்
பாவப்பட்ட பதிப்பு
பார்க்கபடுவதேயில்லை
என்பதையேனும்
அறிவாயா ??

எழுதியவர் : ஆசை அஜீத் (12-Jul-14, 5:28 pm)
பார்வை : 81

மேலே