எங்கே சென்றாய் அம்மா

அம்மா,
அன்னைக்கு நிகர் இவ்வுலகில் உண்டோ??
கண்ணை பரிக்கவைக்கும் உன் அழகு என்னை சிலிர்க்கவைத்தது,
உன் முகம் என்னை மயங்கசெய்தது,
வானத்தை தாண்டி சென்றாலும், பூமியை தள்ளி சென்றாலும்,
உன்னைப்போல் ஒருவரும் இல்லை.
கடவுளுக்கு பல முகங்கள் உண்டு ஆனால்
தாய்க்கு ஒரு முகம் தான்.
தீயோர் பிள்ளையை நெருங்கினாலும் தீயாய் நின்று காப்பாள்,
களங்கமில்லாத தெளிவான நீர் இவள்,
பூமணம் கவரும் காற்று இவள்,
தூய்மை மனம் கொண்ட ஆகாயம் இவள்,
பூமிதேவி போல் நின்று காப்பாள் இவள்.
பத்து மாதங்கள் வயிற்றில் பிள்ளையை சுமந்து,
தன் உயிரை மேலாக பிள்ளையை வளர்ப்பாள். தாய்...
--------------------------------------------------------------------------
கு.சரண் (சரண் குணசேகரன்)