அமமா

அம்.......மா.........
அம்......மா......ஆரம்பம் அம்மா
ஆன்மா அவள்தான் அம்மா
இயற்கை அவளே அம்மா.
ஈகைப் பொருளே அம்மா.
உயிர் இயக்கம் அம்மா.
உணவு அதற்கு அம்மா.
ஊக்கம் உள்ளே அம்மா.
ஊழித் துணையும் அம்மா.
எழுத்தும் எண்ணும் அம்மா.
எல்லாப் புகழும் அம்மா.
ஏற்றம் தூண்டல் அம்மா.
ஏக வாழ்வும் அம்மா.
ஐயம் தீர்த்தவள் அம்மா.
ஐம்புலன் அறிவும் அம்மா.
ஐந்தில் வளைத்தவள் அம்மா.
ஐநில விளக்கம் அம்மா.
ஒலியும் மொழியும் அம்மா.
ஒளியும் வழியும் அம்மா.
ஓங்காரப் பொருளே அம்மா.
ஓம் எனும் மந்திரம் அம்மா.
ஔதசியம் ஊட்டிய அம்மா
ஔடதம் ஏற்றிய அம்மா.
ஔவை அவளே அம்மா.
அஃகேனம் போன்றோ அம்மா!
எக்காலம் ஓயவாள் சும்மா?
ஔதசியம்—பால்.
அஃகேனம்—ஆய்த எழுத்து.
கொ.பெ.பி.அய்யா.