கற்றவை பற்றவை
தும்பை வெண்மை
ஆடை கொண்ட
தூய அன்பிற்குத்
தாய் அவள்
தாயவள் அன்றோ
சுற்றித் திரியும்
செல்லச் சிட்டுகளின்
உதிர்ந்து விழுந்த
இறகுகளில் எல்லாம்
தாயன்பின் வாசம்
ஒளியிழந்த கண்கள்
வதங்கிய வதனம்
ஓசையற்றுவிட்ட செவிகள்
உயிரோட்டமாய்ச் சுடர்விடுகிறது
களங்கமற்ற தாய்மை
கள்ளிச் செடியும்
தன்னை மறந்து
தாய்ப்பால் சொட்டுகிறது
உயிர் மூச்சைப்
பறிப்பது அறியாமல்
இடி மின்னல்
வலியுடன் மடி
நிறைய மழலையாய்
மழைத்துளி அள்ளித்
தருகிறது பூவானம்
அன்பிற்கினிய நல்லாள்
அகம் நிறைய
அன்பு கொண்ட
அல்லிப் பூவானவள்
உயிருக்கும் இனியவளே!!