கற்றவை பற்றவை

அனுபவப் படு
ஆத்திரப் படாதே
இயல்பாய் இரு
ஈகை பெறு
உன்னை உணர்
ஊக்கம் பெறு
எண்ணித் துணி
ஏற்றம் பெறு
ஐயம் களை
ஒரேவழிச் செல்
ஓயாது உழை
ஔஷதம் மனம்
அஃதே குணம்
கண்டதைப் படி
காரணம் அறி
கீர்த்தி பெறு
கெட்டவை விடு
கேட்டவை ஆய்
குற்றம் தவிர்
சரித்திரம் படை
சாதனை புரி
சிந்தனை செய்
சீராய் நட
சுத்தம் பேண்
சூழ்நிலை வெல்
உறுதிப் படு
அமைதி பெறு
தெரிந்து தெளி
மவுனம் குரு
ஞானம் பெறு

எழுதியவர் : ஷேக்ஷ்பியர் (13-Jul-14, 10:38 am)
பார்வை : 91

சிறந்த கவிதைகள்

மேலே