மாண்புமிகு ரமழான்

ஐந்து கடமைகளில் ஓன்று
ரமழானின் புனித நோன்பு

ஆயிரம் மாதங்களை விட
மேன்மை மிகுந்த மாதம்

வணக்கங்களுக்கு பன் மடங்கு
கூலி கொடுக்கும் மாதம் இது

வான் மறை குரான் இறங்கிய
அருள் பொழியும் மாதம் இது

சொர்கத்தின் வாசல் திறந்து
நரகத்தின் வாசல் மூடும் மாதம்

தொழுது மண்டி இட்டு நாம்
அழுது கேட்கும் துவாவை

இறைவன் கபுல் செய்யும்
கருணை மாதம் ரமழான்

திருமறை தினம் ஓதி நாம்
மறுமைக்கு புண்ணியம் சேர்ப்போம்

இறைவா !

எங்கள் மேலான நோன்பை ஏற்று
உன் அருளை எமக்களிபாய் ரஹ்மானே !!

கவிஞர். மு.அ.காதர்

எழுதியவர் : கவிஞர்.மு.அ.காதர். (13-Jul-14, 5:53 pm)
பார்வை : 215

மேலே