உயிர்தொட்டு செல்வாயா

முழு இரவினில் முக்கால் பங்கு உன் இனி நினைவினில்
உன் இனி பெயரையே
உளற வைத்தவளும் நீ ....

ஒருவழியாய் முக்கால் இரவு கழிந்திட ,மீதம் கால் இரவு தூங்கிட முனைந்தால் திடுப்பென்ன அரும் பொழுதினை
புலர வைத்தவளும் நீ ....

நின் நினைவின் மகிழ்வினில்
நான் கிறங்கி கிடக்கையில்
நிலையாய் நின்னை நினைப்பதற்கு இணை பகரமாய்
நின் குளிர்பார்வையினை
இடம்மாற்றி என்னில் பரிமாற்றி
என் பார்வை பட்டும் கூட
சோலை மலர்களினைமெதுவாய்
மலர வைத்தவளும் நீ ...

இப்படி
பாசத்தின் சுகந்த வாசத்தை நுகர்ந்திடாமலே அறியச்செய்தவள் நீ ,

ஒரே முறை நின் சுவாசத்தால் என் நுரையீரல் தீண்டி
உயிர்தொட்டு செல்வாயா ??

எழுதியவர் : ஆசை அஜீத் (13-Jul-14, 6:20 pm)
பார்வை : 94

மேலே