விடியல் இல்லா விலை மாதர்கள்

தந்தை அகால மறைவில்
தாயின் தகாத உறவில்
தரணியில் நீயும் வாழ
தடங்கள் அமைய வில்லையோ!


மது மானிற மேனி
மீந்துயர உடை கழைந்து
இல்லா மனமாய் இசைந்து
இளம் கருகி யதேனோ


சொற்ப பணம் ததும்பி
சற்ப அணிகலன் விரும்பி
சல்லாப தீவினை இணங்கிட
கற்பிழந்த தாரகை யானதேனோ!


மதகு இழை மனையின்றி
மறைவிட நிழல் வாயிலற்று
மருவி நின் மனமுற்று
மானம் நீ துறந்தாயோ!


திண்ணை வரை வந்து
தினமும் உன்னை தின்றிட
விலை கேட்கும் உன்னை
விடியல் கொடுக்க ஆளில்லையோ!


இல்லத் தலைவி ஆகாமல்
இறந்து தான் போனாலும்
ஊர் என்ன பேசிடுமென்று
உள்ளம் சொல்ல வில்லையோ!


கண்முன் காட்சி நடந்து
காவலர் கை அகப்பட்டு
கண்ணீர் இழக்கும் நீ
கண்ணகி கதை கேட்டதில்லையோ!


மறை உணரா நிகழ்ந்து
திரை மறைவாய் புகுந்து
கறை படிய வீழ்ந்து
சிறை அடைக்க பட்டாயோ!

எழுதியவர் : நெல்லை பாரதி (13-Jul-14, 6:30 pm)
பார்வை : 113

மேலே