கற்றவை பற்றவை-சர்நா
மழையின் பின்
ஆடையில் கறையாக
சேறாடும் பிள்ளைகள்
மாவுச் சண்டையில்
மெதுவாய் மாமியாரை
பிசையும் மருமகள்கள்
முகப் பூச்சால்
நம்பிக்கை நகைக்கும்
பெண்ணிய யுவதிகள்
வாசனை திரவியத்தால்
பெண் மயக்கும்
ஆண்மை யுவன்கள்
இலவசம் தந்ததாகவும்
திரும்பவும் தருவதாகவும்
நம் பணத்தையே
வளர்ச்சி பட்டியல்
வாசிக்கிறது சும்மாயிருந்த
வாலிபர் படை
படிக்க முடிக்க
படிக்க படிக்க
வேலை உறுதி
நன்கொடை வேடத்தில்
கல்விச் சடுதிகள்
கருவுறல் தொடங்கி
காடுவரை அடங்கா
பருவம் தவறாத
விளம்பரம் விளங்கி
விவரமாய் கற்றுவிடு
துலங்கிய புழங்கவே
கற்றதை பற்றவிடு