கற்றவை பற்றவை ==போட்டிக்கவிதை

கற்றவை பற்றவை
அன்பை கொடுத்து
அறிவை எடுத்து
இன்பம் புகட்டு
இதயம் சிரித்து

கடுப்பு விடுத்து
கனிவு கொடுத்து
களிப்பு உடுத்து
கடமை உணர்த்து

எளிமை இருத்து
இறையை புகழ்த்து
இருளை துடைத்து
பொழுதை புலர்த்து

களப்பை பிடித்து
கழனி உழுது
கதிரை அறுத்து
வறுமை துரத்து.

விருட்சம் வளர்த்து
வனத்தை அடர்த்து
வறட்சி விரட்டு
வசந்தம் பெருக்கு


சாதி அழித்து
சமத்துவம் படைத்து
சரித்திரம் திருத்து
சமரை நிறுத்து
சமாதானம் வருத்து

புனித பிறப்பே
புயலை எதிர்த்து
புரட்சி கற்றுவை
புதுமை நெருப்பை
புவனம் பற்றவை.

*மெய்யன் நடராஜ் (இலங்கை)

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (13-Jul-14, 8:40 pm)
பார்வை : 113

மேலே