நெடு வானில் என் நிலா -பாகம் 4
காசு பணம் தேடி அலைஞ்சதுல,
காலம் பாதி ஓடிருச்சு!
அதில் கருத்தம்மா ஆளாகி,
பூத்த தினம் மறந்துருச்சு!
பல கட்டம் பாத்து,
காரியமோ தள்ளிப் போகுதடி,
தோஷம் எல்லாம் என் வீட்டு வாசல் முன்னே,
கோஷம் போடுதடி!
ஜாதகமோ,பூணல்காரன்,
சாதகமா வாழ கண்ட வித்தையடி!
அத புரியாம,
பலர் சலவ நோட்ட கையில் கொண்டு சுத்துராண்டி!
-கிராமிய நடையில் பெண்மை புகழ் தொடரும்..