நான் ஏன் பிறந்தேன்

நான் ஏன் பிறந்தேன்
எனக்கே புரியவில்லை
இருக்கவும் பிடிக்கவில்லை !

ஆராரோ பாடிய தாயும்
யார் மீதோவுள்ள கோபத்தை
என் மீது காட்டுகிறாள் !

அரவணைக்கும் தந்தையோ
குடித்து விட்டு வந்தால்
நெருப்பாய் உமிழ்கிறார் !

தனிப்பட்டு என்மேல்
வெறுப்பேதும்
எவர்க்குமில்லை !

இருவருக்கிடையிலான
மௌன யுத்தத்தில்
அனல்மேல் பனித்துளியாய்
இல்லாமல் போய்விடுவேனோ .....??

எழுதியவர் : ராஜ லட்சுமி (14-Jul-14, 2:02 pm)
பார்வை : 740

மேலே