சிரிப்பு சிரிப்பாய் வருது

இசைக்கச்சேரியை இந்தவருடத்திலிருந்து அரசர் ஏன்
நிறுத்தச் சொல்லிட்டாரு..?
-
முதலில் கேன்டீனை ஏற்பாடு பண்ணிட்டு பிறகு
இசைக்கச்சேரியை ஆரம்பிக்கச் சொல்லிட்டாங்களாம்
ரசிகர்கள்
-
>எஸ்.சீதாராமன்
-
--------------------------------------------
-
கன்சல்டிங் பீஸ் கன்சல்டிங் பீஸ் என்று இரண்டு தடவை
போட்டிருக்குதே எதுக்கு?
-
அது எங்க டாக்டர் , இன்னொரு டாக்டர்கிட்டே
கன்சல்ட் பண்ணினதுக்கு கொடுத்த பில்..!
-
.வி.ரேவதி
-
---------------------------------------
-
தலைவர் அடுத்த தேர்தல்ல ஜெயிக்க இப்பவே
ரெடியாகிட்டார்னு எப்படி சொல்றே?
-
தேர்தல் நேரத்துல ஒரு வோட்டருக்கு இவ்வளவுனு
கொடுத்தா ரொம்ப செலவாகுதுன்னு இப்பத்திலே
இருந்தே அவர் தொகுதியில் இருக்கிற ஒவ்வொரு
வாக்காளர்களுக்கும் ஒரு ஒப்பந்தம் போட்டு மாசம்
நூறு ரூபாய் கொடுத்துட்டு வர்றாரே...!
-
>சாயம்
-
--------------------------------------
-
திருடியபொருட்களை லிஸ்ட் போட்டு வீட்டுக்
காரங்ககிட்டே கேயெழுத்து ஏன் கேட்டே?
-
இல்லாட்டி மேலிடத்தில் நான் சொல்றத நம்ப
மாட்டாங்க எசமான்...!
-
>ஜி.கே.எஸ்.மூர்த்தி
-
----------------------------------------
-
பெண் பார்க்க வந்த பையன், பொண்ணு பாடினதும்
ஏன் தலைதெறிக்க ஓடறான்..!

நான் அடிச்சா தாங்கமாட்டே, நாலு நாளு தூங்க
மாட்டேன்னு பாடினாள்...!
-
>வெ.ராஜாராம்
-
-------------------------------------------
நன்றி: கல்கி

எழுதியவர் : முகநூல் (15-Jul-14, 8:05 pm)
பார்வை : 187

சிறந்த நகைச்சுவைகள்

மேலே