குற்றம்

நீர் இல்லா உலகில் உயிர்கள் இல்லை!
நிறைவான வாழ்வில் பெரிய நிஜங்கள் இல்லை!
குறைகள் இல்லா மனிதன் இல்லை!
குற்றம் இல்லா வாழ்க்கை இல்லை!
குழம்பாத மனமும் இல்லை!
வசதிக்கான வாழ்க்கை இது!
வளைந்து கொடுக்க தெரிய வேண்டும்!
நெளிவு சுழிவு அறிய வேண்டும்!
வேண்டாமே வேதாந்தம்
வாழ்க்கையில் ஏது சித்தாந்தம்
குற்றம் புரிபவர் குடும்பத்தில் ஒருவராயின்!
குற்றம் என்பது என்ன நாட்டுக்கா! வீட்டுக்கா!
குற்றவாளி யாரும் இல்லை! உலகை
குடும்பமாய் கொண்டு விட்டால்!
குறைந்த நாள் வாழ்க்கை இது
குறையிலாமல் வாழ்ந்திடுவோம்!
குற்றங்களை அன்பால் வென்றிடுவோம்!