அமர காதல்
மன்றம் பேசும் இலக்கியமும் என் காதலியின்
புன்முறுவல் முன் தோற்று போகும்
வாடை வீசும் மழை சாரல் கூட என் காதலியின்
கடைக்கண் பார்வை முன் தோற்று போகும்
காலம் கூறும் கடிகார முட்கள் என் காதலியின்
இமைகளின் துடிப்பின் முன் தோற்று போகும்
மணம் வீசும் மல்லிகையும் என் காதலியின்
கூந்தல் நறுமணம் முன் தோற்று போகும்
அனல் வீசும் கோடை வெயிலும் என் காதலியின்
கோப பார்வை முன் தோற்று போகும்
வைரம் பாய்ந்த என் போர்வீரன் தேகம் காதலியின்
விரல்நுனி ஸ்பரிசம் முன் தோற்று போகும்
இது என்ன பிரமாதம் எல்லா காதலுக்கும் உள்ள உணர்வு
தானே என்ன பெரிய சிறப்பு என்று கேளுங்கள்
போர்முனையில் பெரும் சண்டையின் நடுவிலும்
என் காதலியின் நினைவுகள் பதட்டம் நீக்கும்
சட்டை பையில் அவளின் புகைப்படம் இருந்தால்
எங்கள் இருவரின் பலம் முன் எதிரி படை தோற்கும்
அந்நிலையில் குண்டுதுளைத்து நாங்கள் இறந்தாலும்
அமர காதல் என்ற பதத்திற்கு உயிர் கொடுப்போம்