என் இனம்

ஊரடங்கு உத்தரவாம்
யாருக்கு.
உனக்காக
எனக்கா!!!

உள்ளம் அழுவது
எதற்க்கு....
ஊனமாய் எழுவது
எதற்க்கு.....

உதடுகளில்
உடைபடும்
எச்சில் குமிழிகளாய் வாழ்வு....

பிழைகளும்
பிழைக்குது
அழகாக...

மனம்கூட
நடிக்குது
பிணமாக....

மதமற்ற நட்பை
எங்குதான் தேடுவதோ!!
மனிதனின் நேயத்தை
எப்படி வளர்ப்பதோ!!!

ஊருக்கு
நடுவராய் ஆலமரம்..

நாட்டிற்க்கு
நடுவராய் மொழி இனம்...

எதில் தான்
பூப்பதோ நாம்
என்ற தமிழினம்!!!!

எழுதியவர் : c.k.வசீம்அன்வர் (17-Jul-14, 12:37 pm)
Tanglish : en inam
பார்வை : 194

மேலே