கனவும் இலட்சியமும்
எண்ணம் 6753-ஐப் படித்தபோது தோன்றியது.....
நினைக்கா தெழுவது நீள்துயில் கொடுப்பது
முனைவ தில்லா மூளையின் முடிச்சது!
கனவென வருவது; கற்பனை கடந்தது!
உள்மனத் தாசையின் ஒளியொலிக் காட்சி!
சிலநாள் இருந்தால் சில்லறை ஆசை!
பலமாய் மனதுள் படிந்து குழைப்பிப்
பலவழி தேடிப் பயன்பெற விழைந்தால்
நலமத னாலே நம்மையும் கடந்து
நாலுபேர் பயனைக் கொடுக்க
ஏலுமேல் அதனை இலட்சியம் என்பமே!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
