ராகுல் - 3

அது ஒரு சனிக்கிழமை.

'டேய்! தூங்குனது போதும்! போய் உங்க அப்பனுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வா! வரப்ப கொஞ்சம் வெங்காயம் எடுத்துட்டு வர சொல்லு. அப்படியே காசு வாங்கிட்டு வா அரிசி வாங்க காசு இல்ல. என்றாள் முத்து. ராகுல் குளித்து முடித்து கிளம்பினான். சாலையில் ஒட்டியிருக்கும் சினிமா போஸ்டர்களை பார்த்தவாறே ஆடி பாடி சென்றான்,

'அப்பா, இந்த சாப்பாடு. எங்க வைக்க?'
'உள்ள வைடா'
'அப்பா! அம்மா வரப்ப வெங்காயம் கொண்டு வர சொல்லுச்சு. அப்படியே அரிசி வாங்க காசு கேட்டுச்சு'
'ம்ம்ம் இந்தா 100 ரூபாய். பதறாம கொண்டு போ! இந்தா உனக்கு பத்து. பாத்து போடா'
'சரிப்பா போய்ட்டு வரேன்'

ராகுலுக்கு வீடியோ கேம் என்றால் கொள்ளை பிரியம். கொடுக்குற காசு வயித்துக்கு போகுதோ இல்லையோ. கண்டிப்பாக வீடியோ கேம் விளையாடாமல் இருக்க மாட்டான். நேராக கடைக்கு சென்று விளயாடலானான். நேரம் ஆக ஆக மணி 3ஐ கடந்திருந்தது.

'அண்ணா எவ்ளோ ஆச்சு?'
'90 ரூபா'
'என்ன அண்ணா இவ்ளோ"
'டேய் மணிக்கு 15 ரூபா. 6 மணி நேரம் ஆச்சு'
'என்ன அண்ணா முன்னயே எழுப்பி விற்றுகலாம்ல?'
'டேய் நீயாதான் எந்திரிச்சு போனும். நாங்கள சொல்வோம்?. காச கொடுத்துட்டு கிளம்பு'

காசை கொடுத்து விட்டு ராகுல் வீட்டிற்கு பறக்கலானான். 'அய்யயோ அம்மா திட்டுமே. அப்பா சாப்ட வந்து இருப்பாரே?' என்று பயந்தவாறே இன்னும் வேகமா ஓடலானான். மூச்சிரைக்க ஓடிவந்து வீட்டை அடைந்தான். மெதுவாக கதவின் ஓரம் ஒளிந்து கொண்டு வீட்டை எட்டி பார்த்தான். 'இந்த சனியன் எங்க போச்சு? அந்த ஆளு பசியோட வருவாரே. என்ன பண்ணுவேன்' என்று கத்தி கொண்டிருந்தாள். ராகுல் பின்புற தலையில் யாரோ தட்டுவது போன்ற உணர்வு.
'டேய் இங்க ஏன்டா நிக்கிற?. உள்ள போ' மருதை. ஒருவித மிரட்சியுடன் உள்ளே சென்றான் ராகுல்.
'என் புள்ள. ஒரு மாதிரி இருக்கான்' மருதை
'உங்க புள்ள காலைல போனது. இப்போ தான் வருது. என்னனு நீங்களே கேளுங்க.
'எங்கட போன?'
'வீடியோ கேம் விளையாட போனேன்ப்பா'
'அரிசி வாங்க கொடுத்த காசு எங்கடா' முத்து
'அது'
'என்னடா அது'
'அது'
'என்னடா அது இதுன்னு'
'இல்லம்மா வீடியோ கேம் விளயாடிடேன்'

சப்பென்ற அறை விழுந்தது ராகுலின் கன்னத்தில். மாறி மாறி அடி உதைதான். அடிவிழுந்த நேரத்தில் விக்னேஷும் ராதாவும் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டது தனிக்கதை. தடுக்க வந்த முத்துவுக்கும் ஒருசில அடிகள். தாய்மையின் பாசம் அல்லவா? இதுலாம் எங்க பொழைக்க போகுது. சொன்னாலும் கேக்க மாட்டேன்குது. இதுலாம் படிக்க வைக்கிறதுக்கு பேசாம எதாவது ஒரு கடைகண்ணில சேத்து விட்ரனும். என்னமோ பண்ணுங்க.

அன்றிரவு---

'டேய் சாப்டியா' மருதை
'துரை கோவமா இருக்காரு' முத்து
'ம்ம்ம் எந்திரிடா' பதிலில்லை.
'சொன்ன கேளு. இங்க பாரு. உனக்கு புடிச்ச பரோட்டா. உக்காந்து சாப்பாடு'
'டேய் எந்திரிடா! சொன்ன கேளு கொஞ்சின ரொம்ப போற. பாரு அதுங்க எவ்ளோ அமைதியா சாப்பிடுது'
நீங்க இங்கட்டு வாங்க. அவன் சாப்புடுவான்'
5 நிமிடத்திற்கு பிறகு,
'அம்மா தண்ணி கொண்டு வா. விக்குது'
'சப்புடுரப்ப மோந்து வச்சிக்க மாட்டியா?
'அப்பா நீ சாப்டியா?

எழுதியவர் : sherish பிரபு (18-Jul-14, 3:30 pm)
சேர்த்தது : Sherish பிரபு
பார்வை : 166

மேலே