நவீன ரோமியோ ஜூலியட் காதல் காவியம் -5முடிவு

நான் முதல் முறையாக பயம் என்ற ஒன்றை உணர்ந்தேன்."நான் விரும்பிய ஒன்றை இழந்து விடுவேனோ?",என்ற பயம்..என் ஜானுவை தேடும் முயற்சியில் இறங்கினேன்.அருகில் இருக்கும் காவல் நிலையம் நோக்கி என் கால்கள் நகர்ந்தது.ஓட்டம் தொடங்கியது.
நான் காவல் நிலையவாசல் அடைந்த பொழுது மீண்டும் ஒரு போன்.......மறுபடியும் அழைத்தது அதே நபர்தான்."டேய்!என்ன தைரியம் உனக்கு?நீ உள்ள போனா அவ்வளவுதான்"என்றான்.அப்பொழுது தான் என்னை யாரோ கண்காணிப்பது எனக்கு தெரிந்தது. நான் வேகமாக வீடு சென்றேன்.என்னிடம் பேசியவன் ஏதோ என்னிடம் எதிர்பார்ப்பது போல் இருந்தது.நான் அவனுக்கு அழைப்பு விடுத்தேன்.அவனிடம் "உனக்கு என்ன வேணும் சொல்லு ?"என்றேன்.
" உடனடியா நான் சொல்லும் இடத்துக்கு 25லட்சம் பணமுடன் வா!"என்றான் அவன்....என் ஜானுவின் முகத்தினை நினைத்த பொழுது பணம் அனைத்தும் வெறும் காகிதங்களாய் தோன்றின..பணம் அனைத்தையும் எடுத்து கொண்டு அவன் கூறிய இடம் நோக்கி புறப்பட்டேன்........
அவன் கூறிய இடத்தினை அடைந்தேன்.அவ்விடம் இருட்டாக இருந்தது.நான் அந்த வீட்டினுள் நுழைந்தேன்.நுழைந்தவுடன் வாயில் கதவு சட்டென்று மூடப்பட்டது.நான் எவ்வளவோ முயன்றும் அக்கதவினை என்னால் திறக்க முடியவில்லை.இருட்டான அறையில் நான் மாட்டி தவித்தேன்.வியர்வை துளிகள் நிலத்தில் விழுந்தது.தரை முழுவதும் ரத்தம்......
நான் முன்னோக்கி நடக்க யாரோ என்னை பின் தொடர்வது போல் இருந்தது..என் மொபைலிலும் signal இல்லை.
நான் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தப்பொழுது என் முன் ஒரு உருவம் கையில் மெழுகுவர்த்தியுடன் நின்று கொண்டு இருந்தது.என் அருகில் இருந்த சுத்தியை எடுத்து
அந்த உருவம் நோக்கி நடந்தேன்.நான் அதை அடிக்க என் கையை ஓங்கினேன்.அவ்வுருவம் "happy birthday"என்று என்னை நோக்கி திரும்பியது.அப்பொழுது என் கையில் இருந்த சுத்தியல் சட்டென்று அவ்வுருவத்தின் முகத்தில் பட்டது.
"டேய்!என்னடா மச்சி? இப்படி பண்ணிட்ட?"என்ற குரல் கேட்டது.நான் திரும்பினேன்.அவன் என் நண்பன் ரமேஷ் என்பது தெரிந்தது."நீ எப்படி இங்க?"என்று நான் கேட்டேன்."டேய்!நீ அடிச்சியே அது வேற யாரும் இல்லை நம்ம ஜானுடா" என்றான்.
என் மூச்சே நின்று போனது,என் ஜானுவை நோக்கி நான் திரும்பினேன்.அவள் கையில் happy birthday for u and me என்ற greeting கார்டு இருந்தது.அவள் பின்னால் எங்கள் முகம் பொறிக்கப்பட்ட cake ஒன்று இருந்தது.ஐயோ!என்று அலறினேன்."what is your name"என்று நான் கேட்க "my name is jaanu"என்று அவள் கூறிய முதல் சந்திப்பு என் நினைவில் வந்தது.என் கண்ணீர் துளிகள் அவள் நெற்றியில் பட்டது.
சட்டென்று நான் தரையில் விழுந்தேன்.என் முதுகு கத்தியால் குத்தப்பட்டது."டேய் !நீங்களா ஒரு வள விருச்சு நீங்களே அதுல விழுந்து எனக்கு 25 லட்சம் பணத்தையும் கொடுத்து ச்சே!நண்பன்டா!"என்றான் ரமேஷ்."என்ன புரியல?ஜானு என்னை கூப்பிட்டு 'உனக்கு surprise தரலாம் என்றாள்'சரி என்றேன்.அவனை என்ன கேட்டு மிரட்டலாம் என்று நான் கேட்க ஏதோ பணம் கேட்டு மிரட்டு என்றாள் ஜானு."என்றான் அந்த வஞ்சகன்..துரோகி!என்று நான் கூறி தரையில் விழுந்தேன்.
சாலையில் காதல் ஜோடி ஒன்று தங்கள் பெற்றோர்களால் துரத்தி விடப்பட்டு செய்வது அறியாது நின்று கொண்டிருந்தன."கடவுளே! நாங்கள் தொழில் செய்ய பணம் கொடு"என்று வேண்டினர்.அவர்கள் முன் ஒரு மூட்டை வந்து விழுந்தது.
"ஐயோ! இங்க ஒருத்தரு கார்ல அடிபட்டு செதுட்டரே!"என்ற அலறல் இந்த ஜோடிகளின் காதில் கேட்டது..இறந்த எங்களின் காதுகளிலும் கேட்டது.அந்த வஞ்சகனின் கதை முடிவுற்றது..
ஒரே நாளில் பிறந்த நாங்கள் ஒரே நாளில் இறக்க நேர்ந்தது.நாங்கள் இறந்தாலும் எங்கள் காதல் தொடரும்..................................................
நன்றி! கண்ணீர் துளிகளுடன் ,
ர.மனோஜ் குமார் ......................................