அடுத்த தலைமுறை
விஞ்ஞானத்தின்
வீரிய
வளர்ச்சியின்
விபரீத
விளையாட்டு !!
(ஒரு சிறிய கற்பனை )
===================================
கணினியையும்
கைபேசியையும்
கலந்தாய்ந்து
அடுத்த தலைமுறை
கருக்கள் ஒரு
சாப்ட்வேர் ஆய்
உருவாக்கப்பட்டு
ஒவ்வொரு
சாப்ட்வேர் க்கும்
ஒரு கடவுச்சொல்
சூட்டப்பட்டு
வர்த்தகத்துடன்
விலை பேசி
அயல் நாட்டிற்க்கு
ஏற்றுமதி
செய்யப்படும்
வாய்ப்பு அதிகம் !
பாசத்தை புதைத்து
பணத்தை மையமாக்கி
விலை பேசப்பட்டு
அயல் நாட்டிற்க்கு
வீசப்பட்டதால்
பெற்றோர்களின்
வங்கி கணக்குகளை
அயல்நாட்டில்
அமர்ந்தபடி
ஹாக் செய்து
பெற்றோர்களுக்கு
பாசமற்ற கல்வி
இலவசமாய் புகட்டப்படும் ===
அன்பு பாசம்
என்கின்ற
சாப்ட்வேரால் பூட்
செய்யப்படாததால்
வைரஸ் கிருமியால்
பெற்றோர்கள்
ட்ராஷ் செய்ய ப் படுவார்கள் ====
விஞ்ஞானம்
வளர்ந்தாலும்
இயற்க்கை எங்கு
நசுக்கப்படுகின்றதோ
செயற்கை அங்கு
இயற்கையாய்
ஆலமரமாய் விழுதிடும் ====
எது விதைக்க
படுகின்றதோ
அது அறுவடை ஆகும் !
பணத்தின் மேல்
உள்ள பாசத்தால்
பாசத்தை பணமாக்கும்
பெற்றோர்கள்
அன்னியர்களாகி
விடும் காலம்
வெகு தூரம் இல்லை ===
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(மௌனமாய் மனம் திறக்கும்
அடுத்த தலைமுறை சிசு )

