பூ சோலை தமிழ் பயணம்

பூவெல்லாம்
சோலை ஆனது
பொய்யெல்லாம்
கவிதை ஆனது
கவிதையெல்லாம்
தமிழ் ஆனது
தமிழில் கவிதை
நாவெல்லாம்
இனிமை ஆனது

அழகெல்லாம்
பெண் ஆனது
பெண் சிரித்தது
புன்னகை ஆனது
புன்னகையெல்லாம்
காதல் ஆனது
காதல் நெஞ்சில்
இனிமை ஆனது

வழியெல்லாம்
பாதை ஆனது
பாதையெல்லாம்
பயணமானது
பயணங்கள்
முடியவில்லை
தொடர்கின்றது
தொடரும் பயணம்
வாழ்க்கை ஆனது

எழுதியவர் : கல்பனா பாரதி (20-Jul-14, 10:30 pm)
பார்வை : 432

மேலே