சொந்தம் பந்தம்
சொந்தம் பந்தம் வாழ்வின் சுகந்தம்
பாசம் அன்பு நேசம் அனைத்தும்
அங்கேதான் நிறைந்திருக்கும்
ஆனந்தம் இருக்குமிடம் சொந்தம்
ஆண்டவன் கொடுத்த உறவு
பக்கத் துணை பகிர்ந்து கொள்ளும் உறவு
சொல்ல சொல்ல இனிக்கும் உறவு
கூடவே வந்த சொந்தம்
சீராட்டி பாராட்டி சிறக்க வழிகாட்டிடுமே
விட்டெறிந்து போனாலும் விலகிடாது
தன்னந்தனி என்று நாம் எண்ணிடாமல்
நிழலாகத் தொடர்ந்து வரும் சொந்தம்
தலைமுறைகள் என்றும் தரணியில்
தலை தூக்கி வாழ்ந்திட செழிப்புடன்
செதுக்கிடுமே சொந்தமும், பந்தமும்
யாருமில்லை என்று யாரையும்
ஆண்டவன் படைக்கவில்லை
சொந்த பந்தம் சேர்ந்ததுதான் வாழ்கை
சோர்ந்து விடாமல் சேர்ந்து வாழ
வந்ததுதான் சொந்தம் பந்தம்
சொர்க்கமே என்றாலும் சொந்தங்கள் போலாகுமா/