தவிக்கும் மனம்
மூங்கில் போல்
வளைந்து கொடுத்து
வாழ்ந்தாலும்
விட்டுக் கொடுத்து
வாழ்ந்தாலும்
அற்ப ஆசைகள் கூட
நிராசையாகும் போது
ஏமாற்றங்களைத்
தாங்கொணா உள்ளம்
ஊமையாய் அழும்
ஆறுதலின்றித் தவிக்கும்
சாய்ந்து கொள்ள
தோள் தேடும்
விழிநீர் துடைக்க
நேசக் கரமின்றி
துடியாய்த் துடிக்கும்
தலைவிதியை நொந்து
பின் தன்நிலை திரும்பும்
தினப்பணி தொடரும் ....!!