பேதங்கள் மறையும்

விலங்கென்று குட்டியை
விலக்கவில்லை பறவை !
புறாவைப் புள்ளினமென்று
புறக்கணிக்கவில்லை குரங்கு !

ஆதரவற்ற குட்டிக்கு
சாய்ந்து கொள்ள
தோள் கொடுத்து
தோழனாய் நிற்கும் புறா !

ஐந்தறிவு ஜீவன்களும்
ஈர மனதுடன் அன்புகாட்டி
ஒற்றுமைக்கு அடையாளமாய்
இனபேதமற்று நட்பாய் இருக்கையில்

ஆறறிவு படைத்த நாமும்
இன பேதம் பார்ப்பதேன் ?
உள்ளத்திலன்பு ஊற்றெடுத்தால்
இந்த உண்மைகள் புரியும் !
பேதங்கள் மறையும் !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (21-Jul-14, 12:20 am)
Tanglish : pethangal maraium
பார்வை : 167

மேலே