இயற்கையின் ஹைக்கூ

உங்கள் மூளைக்கு
வேலைகொடுக்கும்
ஒரு ஹைக்கூவை
யாரோ எழுதிக்கொண்டிருக்கையில் ..........
உங்கள் ரசனைக்கு
வேலை கொடுக்கும்
ஒரு ஹைக்கூவை
இயற்கை
எழுதி முடித்திருக்கக்கூடும் !

ஒரு
கோயில்வாசல் பிச்சைக்காரனோ
ஒரு
குப்பைத்தொட்டி தெருநாயோ
ஒரு
மின்சாரக் கம்பி பறவையோ
அதை
வாசித்துக் கொண்டிருக்கலாம் !

=============================

-குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (21-Jul-14, 11:55 am)
Tanglish : iyarkaiyin haikkoo
பார்வை : 96

மேலே