புகைப்படம்

காலங்கள் கடந்தாலும் பிரிவால் வருந்துகிறேன்
கண்களால் உனைநான் கண்டாலும் – என்னை
செலவின்றி பயணிக்கவைத்தாய் உணர்வுகளால்.
நிஜத்தால் இது சாத்தியமில்லை எனினும்
எண்ணற்ற காட்சிகளை மீண்டும் காணக்கண்டேன்
மீண்டும் வாழ்ந்தேன் அதே உணர்வில்
தானிலை மறந்து உயிராக பயணித்தேன்
குதூகலித்த உற்சாகம் மனதில் நீங்காமல் தவழ
என் விழிநீர் ததும்புவது எதற்காக?
கேட்டாலும் கிடைப்பதில்லை அதுபோல் ஒரு தருணம்
உன்னால் கிடைத்தது மீண்டும் ஒருமுறை
தூண்டும் நினைவுகளை தட்டி எழுப்பினாய்
உனைக்காணும்போது மனதளவில் சேர்கின்றோம்
நீ என்றும் பொக்கிஷமே புகைப்படமே!

எழுதியவர் : விஜய் சிவா (21-Jul-14, 11:14 pm)
Tanglish : pukaipadam
பார்வை : 72

மேலே