எவர் கொண்டு சென்றதோ

என் பூக்களின் மொழி
மாற்றியது யாரென்று
தெரியவில்லை சிறு
தலை அசைவுகளில்
தனித்திருக்கிறேன்

ஒற்றை நொடியில்
எனைப் பறித்த
மின்னல் வெட்டும்
பார்வைக்காக எப்பொழுதும்
இதழ்களில் மின்காந்த
அலைகளாய் புன்னைகை
இழையோடுகிறது

இனிது இனிதாய்ப்
புரியாத ராகங்களில் புதிதாய்
நம் மெட்டுகள் இசைக்கின்றன
எங்கிருந்தோ வந்த
வசந்தகாலப் பறவைகள்

விட்டுப் போக
எத்தனிக்கும் நாணத்தை
சிறை பிடிக்கிறது
பெண்மையின் கட்டுகள்

சந்தித்த வேளையில்
கரைந்திட்ட நொடிகளில்
மூழ்கிக் கொண்டே
வேண்டுகிறேன் உன்னில்
உறைந்திடும் நேரத்திற்காக

பிடித்ததினால் இழந்துவிட்ட
என் தனிமைகளின் பிடியில்
நிறைந்து வழிகிறாய்
நீ மட்டுமே !!

எழுதியவர் : கார்த்திகா AK (22-Jul-14, 3:02 pm)
பார்வை : 161

மேலே