கதாப்பாத்திரம் 0தாரகை0

நீ பாராட்டும் பொழுதே நான் உணர்ந்தேன்
இதுவரை நீ என்னை தோழி என்றழைத்தது
நீ அரங்கேற்றிய நாடகத்தின் எனக்கான கதாபாத்திரப் பெயரென்று...
நித்திரை இடராய் இருந்திருக்குமென இன்று உணர்கிறேன்
நீ கண்டுகொண்டிருந்த காதல் கனவுகளுக்கிடையில்
எனது அன்பு ஒழுகல்கள்...
நீ எப்படி 'அப்படி' செய்தாயென்பதில் சினமல்ல
ஆனால் நானிருக்கும் பொழுது ஏனப்படி...?
கேள்வியில் இதயம் சொட்டுவது அமிலத்துளி
உனது வழிதவறல்கள், தவிப்புகள் எல்லாமும்
தனிமையிலேயே தகித்துக்கொண்டிருக்க
பிறகெதற்கு நானெனும் தோழி உனக்கு?
இவற்றிற்கான முற்றுப்புள்ளிதான்
விடுதலைக்கான தொடக்கம் எனவறிந்ததும்
முடிவை எதிர்நோக்கி இவ்வுறவின் இறுதிச்சடங்கு...