காதலனாக அல்ல உன் கணவனாக 555

என்னவளே...
உன் மனதுக்குள்ளே சுற்றி
கொண்டு இருக்கும் என்னை...
நீ காயபடுத்துவது
போதும்...
என்னிடம் இருப்பது உன்
இதயம் என்று தெரியாமலே...
பூவாக நான் இருந்தால் கூட
சிறிது நேரம்...
உன் கூந்தலில் வாழ்ந்துவிட்டு
இறங்கிருப்பேன்...
சில நிமிடம் உன்னோடு
வாழ்ந்த சந்தோஷத்தில்...
எனக்கு மனம்
வரவில்லை...
நீ என்னை வெறுக்கிறாய்
என்று தெரிந்தும்...
தினம் தினம் மலரும்
மலர்கள் போல...
மலர்ந்து கொண்டே இருக்குதடி
உன் மீதான என் காதல்...
உன்னை போல
புன்னகையும்...
உன்னை போல அழகும்
இல்லையடி மலர்களுக்கு...
உன் ஒற்றை புன்னகையில்
என்னை இழந்து...
உன்னையே நான் சுற்றி கொண்டு
இருக்கிறேன்...
என்னவளே ஒர கண்ணால்
சம்மதம் சொல்...
காதலனாக அல்ல...
உன் கணவனாக.....