இன்னும் காத்துஇருக்கிறோம் கடவுளின் வருகைக்கு

நான் என்ற அகந்தையில் வாழ்கின்றனர்
மனம் என்ற ஆறு வரண்டு இருக்கிறது இங்கு
இருள் அடைந்த குகை ஆழம் அறிய
இவர்கள் மனமும் தான்

மிருகங்கள் கூட தனக்கு ஏற்ற
துணையை தேட மனிதனுள் மட்டும் ஏன்
கருவறையில் காத்து இருந்து பிறவாமல்
உதித்த அரக்கன்களோ

கடை விதியில் பூத்த பூக்கள் காத்துஇருக்க
அரும்பை நட்டவனுக்கு தெரியாமல்
அறுக்கின்றனர்

கடவுள் கூட இதை தடுக்க அவதாரம் எடுக்கவில்லை
பாவங்கள் பல செய்தும் சிறகு முளைத்த
பட்டாம்பூச்சி போல் அடுத்த பூக்களை தேடுகின்றனர்
இன்னும் காத்துஇருக்கிறோம் கடவுளின் வருகைக்கு

எழுதியவர் : (22-Jul-14, 5:17 pm)
சேர்த்தது : joelson
பார்வை : 79

மேலே