பிச்சைகாரர்கள்

எத்தனை காலம் கடந்து
போனாலும்
எத்தனை நாகரீகம் தலைகாட்டி
சென்றாலும்
எங்கள் பெயர்
பிச்சைகாரர்கள்

எங்கள் நாகரீகம்
கிழிந்த ஆடைகளும்
துர்நாற்ற வாடைகளும்
பறட்ட தலைகளும்
பரிதவிக்கும் முகங்களுமே

நாங்களும் உங்களை போன்று
வாழ ஆசைப்பட்டவர்கள்தான்
தலை விதி எங்களுக்கு
தெருவோரத்தையே உறைவிடமாய்
குப்பை தொட்டியை அமுத சுரப்பியாய்
தெருநாய்களை எங்கள் தோழமையாய்
தோற்றுவித்தது ......

எத்தனை ஆட்சிகள் மாறினாலும்
நாங்கள்
கணக்கில் வராத ஒரு ஜாதியே
எத்தனை புரட்ச்சிகள் வந்தாலும்
நாங்கள்
உயர்ச்சி காணா ஜடங்களே

தெருவோர விளக்குகளில்
மட்டும் ஏனோ ஒரு ஈரம்
எங்களின் இருளை
இரவில் போக்குகின்றன
தெருவோர குழாய்கள்
சில நேரம்
எங்களுக்காய் கண்ணீர் வடிக்கின்றன

ஆம் பார்ப்போம்
இன்னும் எத்தனை காலம்
இல்லாத நாதியாய் வாழ்கிறோம் என்று
இன்னும் உதயம் தேடும்
மௌனித்த மனிதர்களாய்

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (22-Jul-14, 3:41 pm)
Tanglish : pichaikararkal
பார்வை : 258

மேலே