கொடை மறந்த ஓடை

கல்லில் நீருரித்து
மலையை ஊடறுத்து
தனக்கெனப் பாதை வகுத்து
நீர் சேர்த்தது ஆறு

சிறுகச் சேர்ந்த நீரெல்லாம்
பெருகிப் போனது வெள்ளமாக
அப்பன் சேர்த்த சொத்தை
அழிக்கும் மகனாக விவசாயம்

சும்மா கிடைத்ததால் சேறுகூட
சோறு சமைக்க எண்ணியது
எருமை மேய்க்கும் பயலுக்கு
நீரும் கிடைத்தது வயலுக்கு

கஷ்டப்பட்டு சேர்த்ததெல்லாம்
நஷ்டப்பட்டு போகிறதே
இஷ்டப்பட்டு ஒவ்வொருவரும்
நாசமாக்கிப் போகினரே

நீரின் ஏக்கம் அறிந்து
நீரைத் தேக்கம் செய்து
அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க
பிறந்தது மின்சாரம்

வங்கியொன்றில் சேமிப்பதே
எதிர்காலத்தில் உதவும்
கடலைத்தன் உடலென எண்ணி
ஒப்படைத்தது தண்ணீரை

நீண்டகாலம் பாதுகாக்க
உப்பிடுவதே முறையென்று
உப்பிட்ட ஆற்றையெல்லாம்
ஒருநொடியில் ஏமாற்றியது

இல்லாதவன் எடுத்தானென்று
வயலுக்குக் கொடுத்திருந்தால்
வரப்பிருக்கும் காலம்வரை
தூயநீர் இருந்திருக்கும்

இருப்பவனுக்கு இன்னுமின்னும்
கொடுப்பதற்கு நினைத்ததால்
ஆற்றுக்கும் நீரில்லை
கடலுக்கும் போதவில்லை

எழுதியவர் : மது மதி (22-Jul-14, 2:58 pm)
பார்வை : 86

மேலே