என் மனதில் ஒரு கேள்வி
தோட்டத்தில் நடை பயிற்சி
நடக்கின்ற போது கண்ட காட்சி
கட்டெறும்பு இரண்டு
இரண்டு மட்டும் செல்ல
ஒன்றின் தடம் மாறாமல்
மற்றொன்று அதனை இணைந்து
பிணைந்து செல்ல
என் மனதில் ஒரு கேள்வி
கட்டெறும்பு இரண்டும்
கணவன் மனைவியா?
காதலன் காதலியா?
அண்ணன் தம்பியா?
அக்கா தங்கையா?
அண்ணன் தங்கையா?