தாய்

உன் வயிற்றில் - நான்
வளரத் தொடங்கிய நாள் முதல்
சகல துன்பங்களையும்
தங்கிக் கொண்டு - நான்
இந்த உலகத்தை விழி திறந்து
பார்க்கும் நாள் வரை
போசனை தந்த - அந்த
மகா சக்தி உன்னைத் தவிர
வேறு யாருக்கும் கிடைக்காதது
உன்னைப் போல மேன்மையான
இரத்தத்தை பாலாய் மாற்றும்
திறமையுடன் இந்த உலகத்தில்
வேறு யாரும் பிறக்காததாலே
ஜனனியே !

எழுதியவர் : fasrina (23-Jul-14, 11:25 am)
Tanglish : thaay
பார்வை : 159

மேலே