சிதறிய துளியில் என் வானங்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
எதிர்ப்பும் எதிர்பார்ப்பும்
பொய்க்கும் தருணங்களில்
ஏதோ ஒன்று
உடைந்து மேலெழும்புகிறது
ஒற்றைத் தீக்குச்சி
உரசி பட்ட தோல்விகள்
பற்றி எரிகிறது
நம்பிக்கைத் தீயில்
தொலைக்கப்பட்ட
உணர்வு நிழல்களில்
கலைந்துவிடாதது
நோக்கம் மட்டுமே
இழப்புகளை இழந்துவிட்ட
தேடல்களின் எச்சமாய்
எதிர்க்காற்று கொண்டுவந்த
சேர்த்த அபிமானங்கள்
தொலைந்து போகா
தொலைவில் தொங்குகிறது
தழுவிய தோல்விகளும்
துரத்திய வெற்றிகளும்
மீண்டுமொரு வேள்வித்தீயில்
எரித்து நான் உயிர்ப்பித்திட !!