மன்மத ராகம் – கே-எஸ்-கலை

----------வயது வந்தவர்களுக்கு மட்டும்----------
யௌவன கனவுகள் யாசித்த இரவுகள்
பவ்விய பதுமையின் மடியினில் புலர்ந்திட -
காரிய இருளோடு காரிகை கொடியென
பாரிய மார்பினில் படர்ந்திட்ட பொழுதது !
விரலெலாம் சுரந்திடும் மதுரக பழரசம்
நரம்பெலாம் அருந்திடும் விருந்தென பரவசம்!
மதுவுண்ட நயனங்கள் மயக்கத்தில் துவண்டிடும்
அதிரச அதரங்கள் நர்த்தனம் ஆடிடும் !
மங்கை நகம்கடித்து மார்பில் முகம்புதைத்து
வேங்கை குணமெடுத்து வேட்கை அகமுடுத்தி
கங்கை வெள்ளமென கரையின் தடையுடைத்து
அங்கை காவிக்கொள்ள இதழ்கள் தாவிக்கொள்ளும் !
இடறி துடிக்குங்கரம் பிடறி மயிர்ப்பிடித்து
இழுத்து எடுத்தவளைக் கழுத்துவரை முகர்ந்து
காதல் பெருக்கெடுக்க காதுமடல் கடித்த -
கணங்கள் முனங்களுடன் காமம் பிறந்துவிடும் !
படரும் பரவசத்தில் தொடரும் அவசரத்தில்
பரவும் இருளிடையில் சுடரும் விளக்கணைத்து
இடையின் அபிநயத்தில் நான்கு கரமிணைத்து
உடலும் உடலுமங்கு உரசித் தீப்பிடிக்கும் !
வேர்வைப் போர்வையென தேகம் போர்த்திக்கொள்ள
வேகம் தேவையென இளமை துடித்துடிக்க
சோர்வைத் தூரத்தள்ளி சுகத்தை வாரியள்ளி
மோகம் பாட்டிசைக்கும் சலங்கை இசையமைக்கும் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
