புற்றீசல் குஞ்சிகள்

வேற்று திக்கில் அம்பை ஏவி
உறவுகள் காயப்பட்டிருந்தது
ஆம் மீதமிருந்த அம்புகள்
இன்னும் அடுக்களை கயிறுகளில்
தொங்க விடப்பட்டிருக்கிறது
உபபுசட்டிஇடை
நினைவுகள் ஊறிப்போய்
கஞ்சிக்கு தொட்டுக்கொள்ளும்
மட்டை ஊருகாயாய
மாறிப்போனது

மீண்டும் நினைவு
புற்றீசல்கள்
விளக்கெண்ணை விளக்குகளின் இடுக்குகளில்
சிறகுகள்!
சாணம் மொழுகி வெடித்த இடுக்குகளில்
ஒளிய முற்படுகிறது இந்த இரவில்

விடிந்ததும் கூட்டுமாரின் விளிம்பு
குச்சிகளால் அப்புறபடுத்த
ஆயத்தமாவேன்
அதுவரை அடைந்து கொள்ளுங்கள்
புற்றீசல் குஞ்சிகளே.

எழுதியவர் : (26-Jul-14, 10:23 pm)
சேர்த்தது : radhivarman.7
Tanglish : putreesal kunjigal
பார்வை : 92

மேலே