உன்னை சீண்டாமல் இருக்க

தினமும் என்னை தாலாட்டும் நிலவே!
உன்னை இனி நான்
தாலாட்டுகிறேன்
என் பாசப் பார்வையால்....

உன்னை சுற்றி
அரண் அமைக்கிறேன்
நட்சத்திரக் கூட்டங்களால்...
யாரும்
உன்னை சீண்டாமல் இருக்க...

நீ தெளிவாய் காட்சி தர
மேகத்திற்கு கட்டளை இடுவேன்
உன்னை நெருங்காமல் இருக்க....

ஏனென்றால்
இரவு நேர உன் புன்னகையால்
குளிர்ந்திருக்கும் நான்
அதே குளிர்ச்சியுடன்
பகல் முழுவதும் உற்சாகமாய்...

எழுதியவர் : சாந்தி (26-Jul-14, 11:28 pm)
பார்வை : 102

மேலே