காதல் வலியும் சுகம்தான் வாழ்வில் 555

என்னவளே...
தென்றலும் சுகம்தான்
சூறாவளியும் சுகம்தான் எனக்கு...
உன்னை
நேசித்த பின்...
காதலில் தோல்வி
கூட சுகம்தானடி எனக்கு...
நீ ஒருத்தி என்னை
வெறுத்ததால்...
காதலை நான் வெறுக்க
போவதுமில்லை...
காதல் அழிய
போவதுமில்லை...
முதன் முதலில் காதலை
வெளிபடுதியவனுக்கு கூட...
தோல்விதான்
கிடைத்திருக்கும்...
காதல் அழியவில்லையே...
நாம் நடைபோட்ட
பாதையெங்கும்
தனிமையில் நடக்கும்போது...
கண்கள் கலங்கினாலும்...
இரவில் வரும் என் கனவுகள்கூட
கண்ணீரையே விரும்புதடி...
நீ என்னருகில் இல்லாமல்
பிரிவை நினைத்தே
இந்த கண்கள்...
என் காதலை நீ
ஏற்க்கவில்லை என்று...
நான் கலங்கியாதோ
ஒரு நாள்...
இன்று உன் காதல் கிடைத்ததால்
தினம் தினம் கலங்குகிறேனடி...
இந்த காதல் தோல்வியும்
எனக்கு சுகம்தானடி...
என் வாழ்வில் ஒரு பகுதியை
கற்றுக்கொண்டேன் நான்...
காதல் வலியும்
சுகம்தான்...
என் வாழ்வில்.....